பிக் பாஸ் 5ல் டிக்கெட் டு ஃபினாலே போட்டியை வென்ற போட்டியாளர்.. யார் தெரியுமா
85 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5.
20 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது டாப் 8 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.
இதில் இந்த வாரம் பிக் பாஸ் 5ல் அதிரடியான டிக்கெட் டு ஃபினாலே போட்டி கடுமையான முறையில் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட சுற்றில் இருந்து நிரூப் வெளியேற்றப்பட்டார்.
அதன்பின், நடந்த இரண்டாம் கட்ட சுற்றில் பாவனி மற்றும் தாமரை வெளியேறினார்கள்.
இதனை தொடர்ந்து நடந்த மூன்றாம் கட்ட சுற்றிலிருந்து பிரியங்கா மற்றும் ராஜு வெளியேற இன்ற நான்காம் கட்ட போட்டி நடைபெற்ற உள்ளது.
அமீர், சிபி, சஞ்சீவ் மூவரும் இடையே நடைபெறும் இந்த கடுமையான சுற்றில் ஈடுபடுவதை நாம் ப்ரோமோவில் பார்த்தோம்.
இந்நிலையில், இதன்பின் நடைபெற்றவிருக்கும் இறுதி சுற்றிலும், அனைத்து டிக்கெட் டு ஃபினாலேவை அமீர் வென்றுள்ளார்.