பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர் இவர் தான்.. அன்ஷிதா போட்டுடைத்த ரகசியம்
பிக் பாஸ் 8
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு ராணவ் மற்றும் மஞ்சரி வெளியேறினர்.
மேலும், டிக்கெட் டு பினாலே டாஸ்கை வென்று ரயான் பினாலேக்கு சென்றுள்ளார். இந்நிலையில், முன்பு வெளியேற்றப்பட்ட அன்ஷிதா மற்றும் ஜெஃப்ரி தற்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பிக் பாஸ் சீசன் டைட்டில் வின்னர் யார் என்பது குறித்து பகிர்ந்துள்ளனர்.
ஷாக்கிங் தகவல்
அந்த நிகழ்ச்சியில், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார்? என்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சற்றும் யோசிக்காமல் அன்ஷிதா, வெற்றியாளர் யார் என்பது உலகத்துக்கே தெரியுமே, முத்துக்குமரன் தான்' என்று கூறியுள்ளார்.
தற்போது, அன்ஷிதாவின் இந்த பதிலை கேட்ட ரசிகர்கள் அவர் தான் வெற்றியாளர் என்றால் அப்போது நீங்கள் பிக் பாஸ் வீட்டில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.