பிக் பாஸ் டைட்டில் வின்னர்களின் பரிதாப நிலை.. காணாமல் போன வெற்றியாளர்கள்
பிக் பாஸ்
வெள்ளித்திரைக்கு பாதை அமைத்து தரும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக வரும் அனைவரும் தங்களது திறமையை காட்டி, சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் வருகிறார்கள்.
சிலருக்கு சாதகமாவும், சிலருக்கு பாதகமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சி அமைகிறது. டைட்டில் வென்ற போட்டியாளர்கள் சினிமாவில் அடுத்தகட்டத்துக்கு நகர்வார்கள் என நம்பப்பட்டது.
ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பலரும் சினிமாவில் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சொல்லப்போனால் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும்.
காணாமல் போன வின்னர்ஸ்
முதல் சீசன் டைட்டில் வின்னர் ஆரவ், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்தார். அப்படம் வெற்றியடையவில்லை. ஆனால் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளிவந்த கலகத்தலைவன் படத்தில் வில்லனாக நடித்து மீண்டும் வரவேற்பை பெற துவங்கினார். மேலும் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
இதன்பின் சீசன் 2 வின்னர் நடிகை ரித்விகா அடையலாம் காணும் அளவிற்கு மக்கள் மத்தியில் படங்கள் மூலம் பிரபலமடையவில்லை. இதன்பின் பிக் பாஸ் சீசன் 3 வின்னர் முகன் ராவ் மற்றும் சீசன் 4 வெற்றியாளர் ஆரி அர்ஜுனன் இருவரும் முதன்மை ரோலில் நடித்த எந்த படமும் கடந்த ஆண்டுகளில் வெளிவரவில்லை.
சிவகார்த்திகேயன் போல் வளர்ந்து வரும் இளம் நடிகரின் வாழ்க்கையை கெடுக்க நினைத்த நபர்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்
இதை தொடர்ந்து பிக் பாஸ் 5 டைட்டில் வின்னர் ராஜு வீட்டிற்க்குள் நல்ல பொழுதுபோக்காளராக இருந்தார். ஆனால், இவர் நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பெயர் சொல்லும் அளவிற்கு வெளிவரவில்லை.
அதே போல் தான் பிக் பாஸ் 6 டைட்டில் வின்னர் அசீம். பிக் பாஸ் வெற்றிக்கு பின் இவரும் என்ன செய்கிறார் என இதுவரை யாருக்கும் தெரியவில்லை.
இதுவரை பிக் பாஸ் டைட்டில் வென்ற நட்சத்திரங்கள் நிலைமை இப்படி இருக்கிறது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பேசி வருகிறார்கள்.
அதே போல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராகள் ஆகவில்லை என்றாலும், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ரியோ, கவின், சாண்டி, தர்ஷன், ஷிவானி, ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட நட்சத்திரங்கள் திரையுலகில் ஜொலித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.