பிக் பாஸ் அல்டிமேட் இரண்டாவது போட்டியாளர்.. வெளிவந்த வீடியோ
பிக் பாஸ் 5 நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு தற்போது புத்தம் புதிதாக துவங்கவுள்ளது பிக் பாஸ் அல்டிமேட்.
இந்த பிக் பாஸ் அல்டிமேட் எப்போதும் போல் இல்லாமல், நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் மட்டுமே தொடர்ந்து 24 மணி நேரம் ஒளிபரப்பாகவுள்ளது.
கடந்த 5 சீசன்களையும் தொகுத்து வழங்கி கமல் ஹாசன் தான், புதிதாக துவங்கவுள்ள பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக சினேகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனை நேற்று ஹாட்ஸ்டார் அறிவித்தது.
இந்நிலையில் அதனை தொடர்ந்து இரண்டாவது போட்டியாளராக பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட ஜூலி என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
அதன் ப்ரோமோ வீடியோ இதோ..
#BBUltimate-ல் ஜுலி !! #YaaruAnthaHousemate pic.twitter.com/eLuXKUYeN2
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) January 25, 2022