மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் சென்சேஷ்னல் போட்டியாளர்கள், சண்டை இருக்கு
பிக்பாஸ் தமிழ் சீசன் 5 விரைவில் முடிவடையவுள்ள நிலையில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பிக் பாஸ் தமிழின் முதல் OTT சீசனை ஜனவரி 30 முதல் தொடங்க உள்ளது.
ஏற்கனவே 5 சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், பிக் பாஸ் அல்டிமேட்டை தொகுத்து வழங்கவுள்ளார்.
கடந்த பிக்பாஸ் சீசன்களில் பிரபலமான சில போட்டியாளர்களை மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார்கள்.
24 மணிநேர ஒளிபரப்பாகும் பிக் பாஸ் அல்டிமேட்டி நிகழ்ச்சியை, நாள் முழுவதும் என்ன நடக்கிறது என்பதைக் ரசிகர்கள் காணலாம்.
" வனிதா, ஓவியா, தாடி பாலாஜி, ஜூலி உள்ளிட்ட பலரும் மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட்டி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளார்.
ஜனவரி 30 முதல் துவங்கவுள்ள உலகின் முதல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கண்டு மகிழுங்கள்..