பிக் பாஸ் வீட்டில் நுழைந்து போட்டியாளரை கைது செய்த போலீஸ்! தடை செய்யப்பட்ட பொருளால் சிக்கல்
பிக் பாஸ்
தமிழ் மற்றும் தெலுங்கில் பிக் பாஸ் 7ம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அதே நேரத்தில் கன்னடத்தில் பிக் பாஸ் 10ம் சீசன் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
அந்த ஷோவில் போட்டியாளராக வரதூர் சந்தோஷ் என்பவரை தற்போது போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.

தடை செய்யப்பட்ட பொருள்
கடந்த ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் சந்தோஷ் தனது கழுத்தில் புலியின் நகம் இருக்கும் செயின் அணிந்து இருந்தார்.
இது சர்ச்சை ஆன நிலையில் அவர் மீது கர்நாடக வனத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் இன்று அவர் பிக் பாஸ் செட்டில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருக்கின்றனர். புலி பல், நகம் போன்றவற்றை விற்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம் என்பதால் தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு என்ன தண்டனை என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

You May Like This Video
உக்ரைன் தலைநகர் மேல் வெடித்த ரஷ்ய ஏவுகணைகள்- விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட காட்சி News Lankasri
இழுபறியாக உள்ள தொகுதி பங்கீடு; தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி - தவெக உடன் பேச்சுவார்த்தையா? IBC Tamilnadu