திருமண கோலத்தில் பிக்பாஸ் வருண் - அக்ஷரா ஜோடி! காதலை உறுதி செய்த ரசிகர்கள்
பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொண்டவர்கள் வருண் மற்றும் அக்ஷரா. அவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டிலேயே மிக நெருக்கமாக இருந்தார்கள். அவர்கள் நெருக்கத்தை பார்த்து அவர்கள காதலிக்கிறார்களா என வீட்டில் இருக்கும் பலரும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அவர்கள் அதை பற்றி வெளிப்படையாக எதுவும் பேசவில்லை.
பிக் பாஸ் முடிந்த பிறகும் வருண் மற்றும் அக்ஷரா இருவருமே ஜோடியாகவே உலா வருகிறார்கள். அவர்களது ஸ்டில்களும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரல் ஆகின்றன.
இந்நிலையில் தற்போது அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு பிரபல மாத இதழுக்காக திருமண கோலத்தில் போட்டோஷூட் நடத்தி இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அவற்றை பார்த்த நெட்டிசன்கள் அவர்கள் காதலை உறுதி செய்ய இதை விட பெரிய ஆதாரம் வேண்டுமா என கேட்டு வருகின்றனர்.


