பிக் பாஸில் அதிகம் சம்பளம் வாங்குவது யார்.. முழு லிஸ்ட் இதோ
பிக் பாஸ்
சின்னத்திரையில் மிகவும் பிரமாண்டமான நிகழ்ச்சி பிக் பாஸ். பல்வேறு மொழிகளில் முன்னணி நட்சத்திரங்களால் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியின் புதிய சீசன்கள் தற்போது துவங்கியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வரும் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 8 துவங்கியது. அதை தொடர்ந்து கடந்த வாரம் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் தமிழ் பிக் பாஸ் சீசன் 8 மற்றும் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக் பாஸ் சீசன் 18 துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பளம்
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர்கள் வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
விஜய் சேதுபதி :
பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் விஜய் சேதுபதி ரூ. 60 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார் என சொல்லப்படுகிறது.
கமல் ஹாசன் :
விஜய் சேதுபதிக்கு முன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல் ஹாசன், பிக் பாஸ் 7வது சீசனுக்காக ரூ. 130 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என தகவல் கூறப்படுகிறது.
நாகர்ஜுனா :
அதே போல் தெலுங்கு பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நாகர்ஜுனா ரூ. 30 கோடி சம்பளமாக வாங்குகிறாராம்.
சல்மான் கான் :
மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 18 தொகுத்து வழங்குவதற்காக சல்மான் கான் ஒரு மாதத்திற்கு ரூ. 60 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார் என்கின்றனர்.
இந்த தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
