கீர்த்தி சுரேஷ் உடன் நடித்த பிக்பாஸ் விஜய் வர்மா! வீடியோவுடன் இதோ
பிக் பாஸ்
தற்போது பிக் பாஸ் 7ம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் விஜய் வர்மா போட்டியாளராக வந்து மூன்றாவது வாரத்திலேயே எலிமினேட் ஆகிவிட்டார். அதன் பின் மீண்டும் தற்போது வைல்டு கார்டு எண்ட்ரியாக அவர் வீட்டுக்குள் வந்து இருக்கிறார்.
விஜய் வர்மா மீண்டும் வீட்டுக்குள் சென்று கூறிய சில விஷயங்கள் மற்ற போட்டியாளர்களுக்கு பெரிய ஹிண்ட் ஆக அமைந்த நிலையில், பலரும் அவர்களது வியூகத்தை மாற்றி வருகின்றனர்.
கீர்த்தி சுரேஷ் உடன் நடித்த விஜய் வர்மா
விஜய் வர்மா பல வருடங்கள் முன்பே நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் நடித்து இருக்கிறார். 2015ல் கீர்த்தி சுரேஷ் நடித்த முதல் தமிழ் படமான 'இது என்ன மாயம்' படத்தில் தான் விஜய் வர்மா அவருடன் நடித்து இருக்கிறார்.
அந்த வீடியோவை தற்போது பார்த்து நெட்டிசன்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். வீடியோ இதோ..