நான் பூமரா? ட்ரோல்களுக்கு பதில் அளித்த பிக் பாஸ் விக்ரமன்
பிக் பாஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 6 ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற 21 போட்டியாளர்களில் ஷிவின், அசீம், விக்ரமன் மட்டும் தான் இறுதி சுற்றுக்கு தகுதியானர்கள்.
இதில் மூவருக்கு இடையே கடும் போட்டி நிலவியது, ஆனால் அதிக வாக்கு எண்ணிக்கையில் அசீம் வெற்றி பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது கருத்துக்களை தைரியமாக முன்வைப்பதால் விக்ரமனுக்கு பல ஆதரவு கிடைத்தது.
இருப்பினும் சிலர் இவரை பூமர் விக்ரமன் என்று சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்தனர். இது குறித்து பேட்டி ஒன்றில் விக்ரமனிடம் கேட்டுள்ளனர்.
நான் பூமரா?
அதற்கு அவர், " 60 களில் பிறந்தவர்களை தான் பூமர் என்று கூறுவார்கள். யாருடைய கருத்து பிற்போக்காக இருக்கிறதோ அவர்களையும் பூமர் என அழைப்பார்கள். ஆனால் இது வரை பிற்போக்கான கருத்துக்களை நான் கூறியதில்லை. சிலர் இந்த பூமர் அர்த்தத்தை தெரியாமல் பேசுகிறார்கள்" என்று விக்ரமன் கூறியுள்ளார்.
அரண்மனை 4 படத்திற்கு விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்! எவ்ளோ தெரியுமா?

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
