உள்ளாடையுடன் ஓடியது நானா? சர்ச்சை வீடியோவுக்கு பிக் பாஸ் விக்ரமன் விளக்கம்
பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்தவர் விக்ரமன். அவர் அந்த சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்தார். அவர் அரசியல் கட்சியில் இருந்ததும், அந்த கட்சியினர் அவருக்கு பிக் பாஸ் டைட்டில் ஜெயிக்க ஆதரவு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பைனலில் அஸீம் தான் டைட்டில் ஜெயித்தார்.
பிக் பாஸ் முடிந்தபிறகு விக்ரமன் ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கினார். தன்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் வெளிநாட்டில் இருந்து அவர் மீது புகார் கூறினார். அவர் மீது பதிவு செய்யப்பட்ட புகார் தற்போது போலீஸ் விசாரணையில் இருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் விக்ரமன் ஒரு புது சர்ச்சையில் சிக்கி இருந்தார். பெண் வேடமிட்டு அவர் ஆண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது. மேலும் உள்ளாடையுடன் அவர் ஓடும் வீடியோவும் வைரல் ஆனது.
விளக்கம்
இந்நிலையில் விக்ரமன் இந்த சர்ச்சை பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
"சினிமா படப்பிடிப்பு சம்மந்தமாக நடந்த ஒன்றை வைத்து அடிப்படை ஆதாரமின்றி அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் கூறி இருக்கிறார்.
அதனால் அது சினிமா ஷூட்டிங் வீடியோ தான் என்பது உறுதியாகி இருக்கிறது.