பிக்பாஸ் 6 புகழ் விக்ரமன் இப்படி ஒரு வேலையை செய்துள்ளாரா?- வைரலாகும் போட்டோ
பிக்பாஸ் 6
பிக்பாஸ் கடந்த சில வருடங்களுக்கு முன் ரசிகர்களால் வரவேற்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி.
ஹாலிவுட்டில் ஹிட்டடித்த இந்நிகழ்ச்சி பாலிவுட்டில் 15 சீசன்களுக்கு மேல் ராஜ்ஜியம் செய்தது, இப்போது தென்னிந்தியாவிலும் வெற்றிகரமாக ஓடுகிறது.
தமிழில் இப்போது 6வது சீசன் ஒளிபரப்பாகிறது, அடுத்த வாரத்தில் நிகழ்ச்சி முடிவுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விக்ரமன் போட்டோ
இந்நிகழ்ச்சியில் ரசிகர்களிடம் நல்ல பெயரை பெற்றிருப்பவர் விக்ரமன். ஆரம்பத்தில் இருந்து விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர்தான் பிக்பாஸ் 6வது சீசனை ஜெயிப்பார் என பலரும் கூறுகின்றனர்.
விக்ரமன் அவரது சினிமா ஆரம்ப காலகட்டத்தில் சீரியலில் நடித்துள்ளார் என்பது நமக்கு தெரியும். ஆனால் சீரியலை தாண்டி விக்ரமன் பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறாராம்.
தற்போது செய்தி வாசிப்பாளர் விக்ரமன் புகைப்படம் ஒன்று ரசிகர்களால் இன்ஸ்டாவில் பகிரப்பட்டு வருகிறது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அறிவிப்பு - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் IBC Tamilnadu
