பிக் பாஸ் வினுஷா ஹீரோயினாக நடிக்கும் புது சீரியல்.. ஹீரோ யார் தெரியுமா?
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் எவ்வளவு பெரிய ஹிட் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. முதலில் ஹீரோயினாக ரோஷ்ணி ஹரிப்ரியன் நடித்தார். ஆனால் அவர் திடீரென வெளியேறியபிறகு வினுஷா தான் புது கண்ணம்மாவாக நடிக்க தொடங்கினார்.
முதல் சீசன் முடிந்த பிறகு பாரதி கண்ணம்மா 2 சீரியல் வினுஷாவை வைத்து விஜய் டிவி தொடங்கியது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் அதற்கு வரவேற்பு கிடைக்காததால் அவரசமாக முடித்துவிட்டனர்.
மீண்டும் வினுஷாவின் அடுத்த சீரியல்
வினுஷா பிக் பாஸ் சென்று வந்த பிறகும் எந்த புது சீரியலிலும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் விஜய் டிவி அவருக்கு புது சான்ஸ் ஒன்றை கொடுத்து இருக்கிறது.
பனி விழும் மலர்வனம் என்ற புது தொடரில் தான் வினுஷா ஹீரோயினாக நடிக்கிறார். விரைவில் அது பற்றிய அறிவிப்பை விஜய் டிவி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரமான ரோஜாவே 2 புகழ் சித்தார்த் தான் ஹீரோவாக நடிக்கிறாராம்.