பிக் பாஸ் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நுழையும் நடிகர் விஜயின்..?அட இவரா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5 ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டு பின்னர் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறி தற்போது 14 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது .
ஒவ்வொரு வாரமும் வித்யாசமான டாஸ்க்குகளுடன் சுவாரஸ்யமாக நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் பிக் பாஸ் வீட்டில் நுழையப்போகும் வைல்டுக்கார்ட் என்ட்ரி குறித்து தகவல் கசிந்துள்ளது.
அதன்படி பிரபல சின்னத்திரை நடிகரும் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவ் வெங்கட் நுழையப்போவதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
இதுகுறித்த பேச்சுவார்த்தையும் சஞ்சீவுடன் விஜய் தொலைக்காட்சி நடத்தி முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளிவரவில்லை.
