விஜய்க்கு வில்லனான பிக் பாஸ் பிரபலம்.. 18 வருடம் கழித்து நடந்த சந்திப்பு
நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். அதில் பிரபுதேவா, பிரஷாந்த், மோகன், சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விஜய் ஜோடியாக மீனக்ஷி சவுத்ரி நடிக்கிறார்.
GOAT படத்தின் ஷூட்டிங் சென்னை, கேரளா, தாய்லாந்து, ரஷ்யா உள்ளிட்ட இடங்களில் நடித்து இருக்கிறது. அவ்வப்போது படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்களும் வெளியாகி வருகின்றன.
18 வருடம் கழித்து விஜய்யுடன் சந்திப்பு
பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட யுகேந்திரன் தற்போது GOAT படத்தில் நெகடிவ் ரோலில் நடிப்பதை உறுதி செய்து இருக்கிறார். வில்லன்களில் ஒருவராக அவர் நடிக்கிறார்.
இதற்கு முன் யூத், பகவதி, திருப்பாச்சி உள்ளிட்ட படங்களில் அவர் விஜய் உடன் பணியாற்றி இருக்கிறார். சந்தித்து 15 வருடங்களுக்கு மேல் ஆவதால் தன்னை விஜய் நினைவு வைத்திருப்பாரா என சந்தேகத்துடன் தான் சென்றாராம் யுகேந்திரன்.
ஆனால் முதல் நாளே விஜய் அவரிடம் நன்றாக பேசினாராம். சந்தித்து 18 வருடங்கள் ஆகிறது என்பதையும் விஜய் சொன்னாராம். இதனால் யுகேந்திரன் நெகிழ்ச்சி ஆகி இருக்கிறார்.
மறைந்த நடிகரும் பாடகருமான மலேஷியா வாசுதேவனின் மகன் தான் யுகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.