ஜெயிலர் படத்தில் இணையும் புஷ்பா படத்தின் வில்லன்..மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்
நெல்சன்
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் நெல்சன். இவர் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது.
விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், இப்படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனமே தந்தனர். இதனால் சமூக வலைத்தளங்களில் இயக்குனர் நெல்சனை ட்ரோல் செய்தனர்.
ஜெயிலர்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 169 படத்தை நெல்சன் இயக்க போவதாக தகவல் வெளியானது. இப்படத்திற்கு ஜெயிலர் என்று டைட்டில் அறிவித்தனர்.
சமீபத்தில் மோகன் லால், சிவராஜ்குமார் போன்ற முன்னணி நடிகர்கள் ஜெயிலர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக பட குழுவினர் அறிவித்தனர். இதை பார்த்த ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் ஜெயிலர் படத்தில் நடிகர் சுனில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இதற்கு முன்பு புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடித்து அசத்தினார். இதனால் ஜெயிலர் படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
ஆள் அடையாளம் தெரியாமல் போன சந்தானம்.. எப்படி இருக்கிறார் என்று பாருங்க