பிகில் காயத்ரி ரெட்டிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! அழகிய ஜோடியின் போட்டோ இதோ
நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்து இருந்தவர் காயத்ரி ரெட்டி. அந்த படம் மூலமாக அவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பாப்புலர் ஆனார்.
அதற்கு பிறகு அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த ஷோவில் அவர் ஆரம்பத்திலேயே வெளியேறினாலும் இரண்டாம் உலகம் என்ற தீவில் மேலும் பல வாரங்கள் தாக்குப்பிடித்தார். அதற்கு அவர் அதிக அளவு பாராட்டுகளையும் பெற்றார்.
அடுத்து அவர் சில படங்களிலும் ஒப்பந்தம் ஆக இருப்பதாக தகவல்கள் வந்தது.
நிச்சயதார்த்தம்
இந்நிலையில் தற்போது காயத்ரி ரெட்டி திடீரென தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என கூறி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
கடந்த ஏப்ரல் 29ம் தேதி தான் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து இருக்கிறது. அழகிய ஜோடியின் புகைப்படங்கள் இதோ..

