சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துள்ள பிகில் பட பிரபலம்.. யாருனு தெரியுமா
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன்.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், புகழ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் என சன் பிச்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் போது, செம மாசான வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர்.
இந்நிலையில் இந்த வீடியோவில் மறைந்திருக்கும் சில விஷயங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அதன்படி, இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திர நடிகை Prajuna Sarah நடித்துள்ளார். இவர் பிகில் படத்தில் விஜய்யுடன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இப்படத்தில் வில்லனாக வினய் நடித்துள்ளது இந்த வீடியோவின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதோ அந்த காட்சிகளின் புகைப்படங்கள்..


