அதிதி சங்கரை அக்கா என்று அழைத்த பிகில் பட நடிகை.. வெளிவந்த புகைப்படம் இதோ
முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் விருமன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் அதிதி சங்கர்.
இதன்பின், கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் கொரோனா குமார் படத்திலும் கமிட்டாகி இருக்கிறார் என்று தகவல் கூறப்படுகிறது.
இந்நிலையில் அறிமுக நடிகை அதிதி சங்கர் மற்றும் ரோபோ சங்கரின் மகள் இந்தராஜா சங்கரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்தராஜா சங்கர் வெளியிட்டுள்ள இந்த பதிவில், அதிதி சங்கரை அக்கா என்று கூறி பதிவு செய்துள்ளார். மேலும் அவருடைய திரை பயணத்திற்கு தன்னுடைய வாழ்த்தையும் இதில் தெரிவித்துள்ளார்.
நடிகை இந்தராஜா சங்கர், விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.