சரிகமப 5 பைனல் மேடையில் கண்ணீர் விட்ட சின்னு! பைக் கிப்ட் ஆக கொடுத்த நபர்..
ஜீ தமிழின் சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் பைனல் இன்று நடைபெற்று வருகிறது. பைனலில் போட்டியாளர்கள் 6 பேரும் அவர்களது திறமையை காட்டி வருகின்றனர்.
மேடையில் சின்னு செந்தமிழன் 'தைய தைய' பாடலை பாடினார். அதற்கு அதிகம் பாராட்டுகளும் கிடைத்தது. அவர் பாடி முடித்தபிறகு தான் ஒரு பெரிய சர்ப்ரைஸ் அவருக்கு காத்திருந்தது.

பைக் கிப்ட்
சின்னுக்கு ரசிகர் ஒருவர் பைக் ஒன்றை வாங்கி கிப்ட் ஆக அனுப்பி இருக்கிறார். அதை பார்த்து அவர் மேடையிலேயே கதறி அழ ஆரம்பித்துவிட்டார்.
தான் சம்பாதிக்கும் பணத்தை கொண்டு ஒரு பழைய ஸ்கூட்டர் தான் வாங்க முடிந்தது எனவும், 'உன் வயதினர் எல்லோரும் புது கார் பைக் என வாங்கிவிட்டார்கள், ஆனால் நீ இப்படி இருக்கிறாய்' என வீட்டில் அப்பா கேட்டதை நினைவு கூர்ந்து சின்னு கண்ணீர் விட்டார்.
