தெலுங்கு Nonstop பிக்பாஸில் களமிறங்கிய நடிகை பிந்து மாதவி !

bigg boss bindu madhavi
By Kathick Mar 07, 2022 06:50 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி பிரபல நடிகையாக திகழும் பிந்து மாதவி, தெலுங்கு பிக்பாஸில் கலந்துகொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் வெப்பம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி, தொடர்ந்து கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2 என வெற்றிப்படங்களில் நடித்தார்.

தெலுங்கு Nonstop பிக்பாஸில் களமிறங்கிய நடிகை பிந்து மாதவி ! | Bindu Madhavani In Bigg Boss

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பல வெற்றிப்படங்களில் நடித்தார், தமிழில் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸில் கலந்து கொண்டு புகழ்பெற்றார். பிக்பாஸில் கலந்து கொண்ட பிறகு அவருக்கு பெருமளவில் ரசிகர் பட்டாளம் தமிழகத்தில் உருவாகியது. இதனை தொடர்ந்து தற்போது தமிழைப்போல தெலுங்கு டிஜிட்டலில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் நான்ஸ்டாப் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்பாளராக கலந்துகொண்டுள்ளார்.

இதற்கு பெறும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்பொழுதே பிந்துமாதவி ஆர்மி என பல டிவிட்டர் மற்றும் #ஹாஷ்டாக்குகள் துவங்கப்பட்டு பரபரப்பாகி வருகிறது. இந்த போட்டியினை நடிகர் நாகர்ஜுனா அக்கினேனி தொகுத்து வழங்கி வருகிறார். இப்போட்டி பிந்து மாதவிக்கு தெலுங்கிலும் பெரும் புகழை பெற்றுத்தருமென அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர்.

தெலுங்கு Nonstop பிக்பாஸில் களமிறங்கிய நடிகை பிந்து மாதவி ! | Bindu Madhavani In Bigg Boss

தற்போது தமிழில், நடிகர் சசிகுமாருடன் பகைவனுக்கு அருள்வாய், மாயன் மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஜெயகொடி இயக்கத்தில் நாயகியை முதன்மை கதாபாத்திரமாக கொண்ட ‘யாருக்கும் அஞ்சேல்’ படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.

நாக சைதன்யாவுடன் மீண்டும் இணைவாரா சமந்தா.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US