பிக் பாஸ் வீட்டுக்கு செல்லும் பிந்து மாதவி! அவரே வெளியிட்ட வீடியோ
தமிழில் கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற பல படங்களில் நடித்து இருப்பவர் பிந்து மாதவி. அவர் தமிழ் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு அவர் திரைப்படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். கடைசியாக தமிழில் அவர் கழுகு 2 படத்தில் நடித்து இருந்தார். அதன் பிருகு யாருக்கும் அஞ்சேல் என்ற படத்தில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் அவர் தெலுங்கில் தொடங்கி இருக்கும் பிக் பாஸ் ஓடிடி ஷோவுக்கு போட்டியாளராக சென்றிருக்கிறார். தமிழில் தொடங்கி ஒரு மாதம் ஆகும் நிலையில் தற்போது தெலுங்கில் 24x7 ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தொடங்கி இருக்கிறது. அதில் பங்கேற்கும் தனக்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் என பிந்து மாதவி வீடியோவில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.