இதயத்தில் 2 ஓட்டை, 3 மாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை- நடிகையின் குழந்தைக்கு நடந்த சோகம்
பிபாஷா பாசு
விஜய் நடித்த ஹிட் படங்களில் ஒன்று சச்சின், இந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களால் அறியப்பட்டவர் தான் பிபாஷா பாசு.
தமிழில் நிறைய படங்கள் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடந்த 2016ம் ஆண்டு கரண்சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் கடந்தாண்டு நவம்பர் 12ம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது, அந்த குழந்தைக்கும் அவர் தேவி என்று பெயரிட்டார்.
குழந்தையின் உடல்நிலை
அவரது குழந்தைக்கு தொடர்ந்து உடல்நலம் குறைவாக இருந்த நிலையில் மருத்துவர்களிடம் சென்று பரிசோதனை செய்தபோது தான் அவரது மகளுக்கு இதயத்தில் இரண்டு ஓட்டை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதையடுத்து எந்த தாய்க்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என்று பிபாஷா பாசு உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
தற்போது அவரது குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடத்தி உள்ளதாகவும் மருத்துவரின் உதவியால் தனது மகள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்ட ரசிகர்கள் உங்கள் குழந்தை நலமாக இருப்பார் கவலைப்படாதீர்கள் என்று கூறி வருகின்றனர்.
ஸ்பெஷல் தினத்தில் தனது மகனின் சூப்பர் புகைப்படத்தை வெளியிட்ட மிர்ச்சி செந்தில்- குவியும் லைக்ஸ்
![கைவிலங்கு, கால்களில் சங்கிலி.. இந்தியர்களுக்கு அமெரிக்கா செய்த கொடூரம் - திடுக் தகவல்!](https://cdn.ibcstack.com/article/2389e08f-44e7-42a8-a1c1-7fd6a4bda181/25-67a458bc49704-sm.webp)
கைவிலங்கு, கால்களில் சங்கிலி.. இந்தியர்களுக்கு அமெரிக்கா செய்த கொடூரம் - திடுக் தகவல்! IBC Tamilnadu
![ஆயிரத்திற்கு K என்ற வார்த்தை பயன்படுத்துவது ஏன்? காரணம் இதுதான் -அவசியம் தெரிஞ்சிகோங்க!](https://cdn.ibcstack.com/article/3e707cff-5a30-4e8a-b231-a04e7baa7612/25-67a4932d7ea9d-sm.webp)