விளையாடிக் கொண்டிருக்கும் போதே மயங்கி உயிரிழந்த பண்டிட் பிர்ஜு மகாராஜ்- சோகத்தின் உச்சம்
பண்டிட் பிர்ஜு மகாராஜ் நடன கலைஞர்கள் இவரை நன்கு அறிந்திருப்பார்கள்.
ஆனால் தமிழ் மக்களுக்கு இவரை அடையாளப்படுத்தியது நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் தான். உன்னைக் காணாத என்ற பாடலில் கதக் நடனம் ஆடி அனைவரையும் அசத்தியிருப்பார்.
அப்பாடலுக்கு நடனம் அமைத்தது பண்டிட் பிர்ஜு மகாராஜ் அவர்கள் தான். இவர் நேற்றிரவு தனது பேரக் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
உடனே குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்ட செல்ல அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளார். பண்டிட் பிர்ஜு மகாராஜின் மரண செய்தி பிரபலங்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
83 வயதான பிர்ஜு மகாராஜை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு சினிஉலகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிற்து.