கயல் சீரியலில் இருந்து நீக்கப்பட்ட நடிகர்! இயக்குனர் மீது அதிர்ச்சி புகார்
சன் டிவியின் டாப் சீரியலாக இருந்து வருகிறது கயல். சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் ஜோடியாக நடிக்கும் இந்த தொடருக்கு ஆரம்பத்தில் இருந்தே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
பெரிய குடும்பம், அதை கஷ்டப்பட்டு சம்பாதித்து காப்பாற்றும் பெண், அந்த குடும்பத்திற்கு தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் சிக்கல்களை எப்படி சமாளிக்கிறார் என்பது தான் கதையாக இருக்கும். கயலின் தங்கை ஆனந்தி செய்த கொலை பற்றி விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக நடித்து வந்தார் பிர்லா போஸ்.
சாப்பாடு பிரச்சனை.. நீக்கப்பட்ட நடிகர்
தற்போது பிர்லா போஸை திடீரென சீரியலில் இருந்து நீக்கிவிட்டார்களாம். நீக்கப்பட்டதை கூட முறையாக அழைத்து சொல்லவில்லையாம்.
கயல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர் சாப்பிட்ட பிறகு தான் மற்ற எல்லோரும் சாப்பிட வேண்டும் என்கிற விதி இருக்கிறதாம். அதை பற்றி நான் கேள்வி எழுப்பியதால் தான் இயக்குனர் திட்டும்போது என்னை நீக்கி இருக்கிறார் என பிர்லா போஸ் தெரிவித்து இருக்கிறார்.
மற்றபடி சன் டிவி அல்லது தயாரிப்பு நிறுவனத்துடன் எந்த பிரச்னையும் இல்லை, எதுவாக இருந்தாலும் இயக்குனர் பேசி இருக்கலாமே என பிர்லா போஸ் கோபமாக பேட்டி கொடுத்திருக்கிறார்.