படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடிய மருமகள் சீரியல் நடிகர்கள்.. அப்படி என்ன விசேஷம்
மருமகள்
சன் டிவியில் கடந்த சில மாதங்களாக நிறைய புத்தம் புதிய தொடர்கள் களமிறங்கி வருகிறது.
அப்படி கடந்த ஜுன் 10, 2024 வெளியான சீரியல் தான் மருமகள். இதில் கேப்ரியல்லா மற்றும் ராகுல் ரவி முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வருகின்றனர்.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.
டிஆர்பியில் டாப்பில் கலக்கிக் கொண்டிருக்கும் இந்த தொடர் இதுவரை 110 எபிசோடுகள் வரை ஒளிபரப்பாகி இருக்கிறது.
கொண்டாட்டம்
நாளுக்கு நாள் டிஆர்பியில் உயர்ந்துகொண்டே இருக்கும் இந்த தொடர் குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் தற்போது கேக் வெட்டி கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.
அதாவது கேப்ரியல்லா மற்றும் ராகுல் ரவியின் பிறந்தநாளுக்காக படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.