ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகை அசினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. பிறந்தநாள் ஸ்பெஷல்
நடிகை அசின்
தெலுங்கு சினிமாவில் தனது பயணத்தை தொடங்கி தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை அசின்.
15 வயதில் தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் 18 வயதில் அம்மா நன்னா ஓ தமிழா அம்மை என்ற தெலுங்கு படத்தின் மூலம் நாயகியானார்.
தமிழ் பக்கம் வந்தவருக்கு கஜினி படம் எதிர்ப்பார்க்க முடியாத அளவு வெற்றியை கொடுக்க தொடர்ந்து சிவகாசி, வரலாறு, போக்கிரி, வேல் மற்றும் தசாவதாரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.
பாலிவுட்டில் கஜினி படத்தின் ரீமேக் மூலம் அமீர்கானுடன் ஜோடியாக நடித்து அறிமுகமானார். இவர் கடைசியாக நடித்தது ஹிந்தியில் வெளியான ஆல் இஸ் வெல் படம் தான்.

கணவருக்கு பிடிக்காத விஷயத்தை செய்ததால் விவாகரத்து பெறுகிறாரா சுந்தரி சீரியல் கேப்ரியல்லா... விஷயம் என்ன?
அதன்பின் படங்கள் நடிக்காமல் இருந்த நடிகை அசின் 2016ம் ஆண்டு பிரபல தொழிலதிபர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது, தனது குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை மட்டும் அசின் தனது இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்.
சொத்து மதிப்பு
இன்று அசின் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் நடிகை அசின் மற்றும் அவரது கணவர் ராகுல் ஷர்மா இருவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற விவரம் வலம் வருகிறது.
நடிகை அசினின் சொத்து மதிப்பு ரூ. 130 கோடி என்றும் அவரது கணவரின் சொத்து ரூ. 1300 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
