She Is A Fantasy, என்றும் இளமை நடிகை ஜோதிகாவின் பிறந்தநாள்... அவரது சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
ஜோதிகா
பிரியதர்ஷன் இயக்கிய டோலி சஜா கே ரக்னா என்ற ஹிந்தி படத்தின் மூலம் முதலில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா.
அஜித்தின் வாலி படத்தின் மூலம் 2வது நாயகியாக அறிமுகமானவர் அடுத்து சூர்யாவின் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நாயகியானார்.
பின் முகவரி, குஷி, ரிதம், தெனாலி என முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்திருந்தார்.
பிஸியாக நடித்துக் கொண்டு வந்தவருக்கு சூர்யாவுடன் காதல் ஏற்பட இருவரும் தமிழ்நாடே கொண்டாட திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
பிறந்தநாள்
திருமணம், குழந்தைகள் என சினிமா பக்கம் வராமல் இருந்தவர் இப்போது மீண்டும் நடிப்பில் பிஸியாகிவிட்டார். அக்டோபர் 18, இன்று நடிகை ஜோதிகாவின் பிறந்தநாள்.
இந்த நிலையில் நடிகையின் சொத்து மதிப்பு குறித்த விவரம் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது ஒரு படத்துக்கு ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கும் ஜோதிகா விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.
அதன்மூலம் ரூ. 20 கோடி முதல் ரூ. 30 கோடி வரை வருமானம் ஈட்டுகிறாராம். படங்கள், விளம்பரம் என சம்பாதிக்கும் நடிகை ஜோதிகாவின் சொத்து மதிப்பு ரூ. 330 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri
