பைசன் படம் 7 நாட்களில் செய்துள்ள வசூல்... பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
பைசன்
கடந்த வாரம் திரைக்கு வந்த பைசன் படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் 7 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாமா?

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார்.
இப்படத்தில் லால், பசுபதி, அமீர், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வசூல்
இந்த நிலையில், 7 நாட்களில் பைசன் உலகளவில் ரூ. 43 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
