பைசன் படம் முதல் நாள் உலகளவில் செய்த வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
பைசன்
துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளியாகியிருக்கும் படம் பைசன் காளமாடன்.
கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை மாரி செல்வராஜ் உருவாக்கியுள்ளார். இதில் முக்கியமான அரசியலையும் அவர் பேசியுள்ளார்.

இப்படத்தில் பசுபதி, லால், அமீர், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
முதல் நாள் வசூல்
மக்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், பைசன் திரைப்படம் உலகளவில் முதல் நாள் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, முதல் நாள் இப்படம் ரூ. 5+ கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதவியேற்பு விழாவிற்குப் பின் மேசையை தூக்கிய முதல்வர் விஜய் - வைரலாகும் சிம்பிளிசிட்டி வீடியோ! IBC Tamilnadu
திருமணம், வெளிநாட்டுப் பயணங்கள் வேண்டாம்... தங்கம் வாங்காதீர்: இந்தியப் பிரதமர் வலியுறுத்தல் News Lankasri