எங்களை கேவலமா பேசிட்டாரு.. பிக் பாஸ் பிரியங்காவுக்கு எதிராக கிளம்பிய 'பாஜக'வினர்
முன்னணி விஜய் டிவி தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே தற்போது பிக் பாஸ் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். அவர். அவர் இந்த சீஸனின் முக்கிய போட்டியாளராக இருந்துவரும் நிலையில் தற்போது அவர் மீது பாஜகவினர் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.
மற்றொரு பிக் பாஸ் போட்டியாளரான தாமரை உடன் பிரியங்காவுக்கு சண்டை இருந்து வரும் நிலையில், 'தாமரை நாட்டில் இருந்தாலும் பிரச்சனை, வீட்டில் இருந்தாலும் பிரச்சனை' என பிரியங்கா கூறி இருக்கிறார்.
ஆனால் விஜய் டிவி சர்ச்சையை தவிர்க்க 'நாட்டில்' என்று வார்த்தையை மட்டும் மியூட் செய்து மறைத்துவிட்டது. ஆனாலும் பாஜகவினர் பிரியங்கா பேச்சுக்கு கொந்தளிப்பில் இருக்கின்றனர்.
பிரியங்காவுக்கு எதிராக ட்விட்டரில் தற்போது பதிவிட்டு வருகின்றனர்.
தாமரை நாட்டுற்கு நல்லது இல்ல !
— BJP-கீழப்பாவூர் ஒன்றியம் (@Bjp_keelapavoor) December 5, 2021
வீட்டிற்க்கும் நல்லது இல்லை
என்று #BigBoss நிகழ்ச்சியில் கூறிய #PriyankaDeshpande வை வன்மையாக கண்டிக்கிறேன். #BigBossTamil5
இதுவே வேற ஒரு கட்சிய பத்தி இப்படி பேசி இருந்தா சும்மா இருப்பாங்களா ?? #EliminatePriyanka pic.twitter.com/2csRTttr5B