பாக்ஸ் ஆபிஸ்: பட்டையை கிளப்பும் பிளாஸ்ட் திரைப்படம்.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா?
பிளாஸ்ட்
அறிமுக இயக்குநர்களின் இயக்கத்தில் வெளிவரும் திரைப்படங்கள் தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அயோத்தி, டூரிஸ்ட் பேமிலி, டாடா, போர் தொழில் போன்ற பல திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

அந்த வரிசையில் சமீபத்தில் அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம்தான் பிளாஸ்ட். இப்படத்தில் அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன், அபிராமி நடித்திருந்தனர். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
வசூல்
முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வரும் பிளாஸ்ட் திரைப்படம் இதுவரை 13 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த நிலையில், 13 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 62 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri
கடனுக்கு வட்டி செலுத்தவே வருவாயின் மூன்றில் ஒரு பங்கு : நிதியமைச்சர் கூறிய பரபரப்பு தகவல்! IBC Tamilnadu