24 நாட்களில் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
அறிமுக இயக்குநர்களின் இயக்கத்தில் வெளிவரும் திரைப்படங்கள் தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அயோத்தி, டூரிஸ்ட் பேமிலி, டாடா, போர் தொழில் போன்ற பல திரைப்படங்களை அறிமுக இயக்குநர்கள் இயக்கி மாபெரும் வெற்றி பெற்றுள்ளன.

அந்த வரிசையில் கடந்த மாதம் அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம்தான் பிளாஸ்ட். இப்படத்தில் அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன், அபிராமி நடித்திருக்கின்றனர்.

முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வரும் பிளாஸ்ட் திரைப்படம் இதுவரை 24 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த நிலையில், பிளாஸ்ட் திரைப்படம் 24 நாட்களில் ரூ. 78 கோடிக்களுக்கும் மேல் வசூலித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள பிளாஸ்ட் திரைப்படம் வருகிற ஜூன் 25-ஆம் தேதி முதல் ஓடிடியில் வெளியாகிறது என தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
