5 நாட்களில் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
பிளாஸ்ட்
அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில், ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் உருவான திரைப்படம் பிளாஸ்ட். இப்படத்தில் ப்ரீத்தி முகுந்தன், அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கேஜிஎப், சலார் படங்களுக்கு இசையமைத்திருந்த இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பேமிலி ஆக்ஷன் ட்ராமா கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வசூல்
புதிதாக வெளிவரும் திரைப்படங்களின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த வாரம் வெளியான பிளாஸ்ட் திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல்களும் முதல் நாளிலிருந்தே வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், 5 நாட்களில் பிளாஸ்ட் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 5 நாட்களில் இப்படம் ரூ. 30 கோடி வசூலித்துள்ளது.
மகளின் திருமணத்துக்கு முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - உருக்கமான பதிவு IBC Tamilnadu
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri