கருப்பு திரைப்படத்தை விட அதிக வசூல் செய்த பிளாஸ்ட்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
கருப்பு - பிளாஸ்ட்
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த மே 15-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கருப்பு. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்தை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மற்றொரு வெற்றிதான் பிளாஸ்ட். ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ப்ரீத்தி முகுந்தன், அபிராமி ஆகியோர் நடித்திருந்தனர்.

பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
கருப்பு படத்திற்கு கிடைத்த வரவேற்பை போலவே பிளாஸ்ட் திரைப்படத்திற்கும் மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர். இதனால் நாளுக்கு நாள் வசூலில் இப்படம் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த நிலையில், கருப்பு திரைப்படத்தை விட பிளாஸ்ட் திரைப்படம் அதிக வசூலை செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. ஆம், கேரளாவில் கருப்பு திரைப்படம் மொத்தமாக ரூ. 14 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. ஆனால், பிளாஸ்ட் திரைப்படம் கேரளாவில் ரூ. 15 கோடி வசூல் செய்து கருப்புவின் சாதனையை முறியடித்துள்ளது.

மெஸ்ஸிக்கு ஒருமுறை இல்லை! FIFA வரலாற்றிலேயே இருமுறை Golden Boot வாங்கிய முதல் வீரர் இவர்தான் News Lankasri