பிளாஸ்ட் திரைப்படம் மூலம் கிடைத்துள்ள லாபம்.. அடேங்கப்பா இத்தனை கோடியா
பிளாஸ்ட்
ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் உருவாகி அண்மையில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் பிளாஸ்ட். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கினார்.

இவர், இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதனுடன் பணிபுரிந்தவர் ஆவார். தனது முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளார்.

அர்ஜுனுடன் இணைந்து அவருக்கு இணையான சண்டை காட்சிகளில் ப்ரீத்தி முகுந்தன் மற்றும் அபிராமி அசத்தியிருந்தனர். பேமிலி ஆக்ஷன் டிராமா கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
லாபம்
இந்த நிலையில், இப்படத்தின் மூலம் கிடைத்துள்ள லாபம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் திரையரங்குகள் மூலம் ரூ. 27 கோடிக்கும் மேல் லாபம் ஈட்டியுள்ளது. மேலும் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் பிசினஸ் சேர்ந்தால் மொத்தமாக ரூ. 45 கோடிக்கும் மேல் லாபம் கிடைத்திருக்கும் என கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் - வெளியான அரசாணை IBC Tamilnadu