பிளாஸ்ட் திரை விமர்சனம்

Report

ஆக்ஷன் கிங் அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன், அபிராமி நடிப்பில் அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் பிளாஸ்ட். ஆக்ஷன் கதைக்களத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் எப்படி உள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

பிளாஸ்ட் திரை விமர்சனம் | Blast Movie Review

கதைக்களம்

கராத்தே மாஸ்டராக இருக்கும் அர்ஜுன், தன் மகள் ப்ரீத்திக்கு சிறு வயதில் இருந்தே கராத்தே கற்றுக்கொடுத்து ஒரு பெண் எப்போதும் துணிச்சலாகவும், யாருடைய துணையையும் நாடக்கூடாது என்றும் வளர்க்கிறார். 

தன்னுடைய உறவுகளுக்கு மட்டுமின்றி வேறு யாருக்கு எங்கு தவறு நடந்தாலும், அவர்களுக்கு துணையாக நிற்க வேண்டும் என சொல்லி சொல்லி வளர்க்கிறார். இதனால் தன் கண்முன் நடக்கும் அநியாயங்களை கண்டும் காணாமல் செல்லாமல், தட்டிக்கேட்கிறார். எதிர்த்து அடிக்க வருபவர்களை போட்டு பொளந்து எடுக்கிறார். தந்தையின் பேச்சை கேட்டு இப்படி வளர்ந்துவிட்டதால், இதனால் பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொள்வாரோ என தன் மகளை நினைத்து தினம் தினம் கவலைப்படுகிறார் அபிராமி.

பிளாஸ்ட் திரை விமர்சனம் | Blast Movie Review

இவர்களின் வாழ்க்கை ஒரு பக்கம் நகர, மறுபக்கம் வில்லன் மிகவும் விலைஉயர்ந்த கனிமங்களை எடுக்க, ஒரு கிராமத்தையே அழிக்க திட்டமிடுகிறார். இதற்காக அமைச்சரை சந்தித்து அனுமதி கேட்க, இந்த திட்டத்தின் முழு மதிப்பு 7,000 கோடி அதில் எனக்கு 1,000 கோடி தந்துவிடுங்கள் என கேட்கிறார். அதற்கான பணத்தை ஏற்பாடு செய்து, முக்கிய நபர் ஒருவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.

ஆனால், அந்த நபரால் பணத்தை அமைச்சரிடம் சேர்க்க முடியாமல் போகிறது, இதற்கிடையில் இந்த பிரச்சனையில் அர்ஜுன் குடும்பம் சிக்கிக்கொள்ள, இதன்பின் என்ன நடந்தது? அர்ஜுன் குடும்பம் இதில் எப்படி சிக்கினார்கள்? இதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா, இல்லையா? என்பதை ஆக்ஷனுடன் சொல்லிய திரைப்படம்தான் பிளாஸ்ட்.

பிளாஸ்ட் திரை விமர்சனம் | Blast Movie Review

படத்தை பற்றிய அலசல்

படத்தின் தலைப்பு போலவே, ஆரம்பத்தில் இருந்து படம் முழுக்க சண்டை காட்சிகள் எல்லாம் பிளாஸ்ட் தான். ஒவ்வொரு சண்டை காட்சிகளையும் நேர்த்தியாகவும், அதே சமயம் விறுவிறுப்பாகவும் எடுத்துள்ளனர். அதற்கு ஸ்டண்ட் மாஸ்டர் பீனிக்ஸ் பிரபுவுக்கு முதல் வாழ்த்துக்கள். ஒரு இடத்தில் கூட இப்படத்தில் இடம்பெற்ற சண்டை காட்சிகள் சலிக்கவோ அல்லது முகம் சுழிக்கும் அளவிற்கோ இல்லை.

அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் முதல் படத்திலேயே பேமிலி ஆக்ஷன் ட்ராமா கதைக்களத்தை தேர்ந்தெடுத்து, அதனை சிறப்பாகவும் நமக்கு வழங்கியுள்ளார். படத்தின் முதல் பாதி திரைக்கதை ஆங்காங்கே தொய்வு ஏற்பட்டாலும், இரண்டாம் பாதி வேற லெவலில் இருந்தது. வசனங்கள், கேமரா மூவ்மென்ட்ஸ், கதாபாத்திர வடிவமைப்பு, சிறு சிறு சர்ப்ரைஸ் மூவ்மென்ட்ஸ் ஆகியவை நன்றாக இருந்தது.

பிளாஸ்ட் திரை விமர்சனம் | Blast Movie Review

ஆக்ஷன் கிங் அர்ஜுன், இவரை பற்றி நாம் சொல்லித்தான் அனைவருக்கும் தெரியவேண்டும் என்பது இல்லை. திரை வாழ்க்கையில் 46 ஆண்டுகளாகி ஆக்ஷனில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். ஒரு திரைப்படத்தில் இரண்டு மூன்று ஆக்ஷன் காட்சிகளில் நாம் அர்ஜுனை பார்த்து வியந்திருப்போம். ஆனால், இப்படத்தில் வரும் பல சண்டை காட்சிகளில் தன்னுடைய முழு உழைப்பையும் போட்டு கராத்தே மாஸ்டராக பின்னி பெடலெடுத்துள்ளார்.

அர்ஜுனுக்கு நிகரான ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார் ப்ரீத்தி முகுந்தன். ஆச கூட பாடல் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ப்ரீத்தி முகுந்தனுக்கு நடிகையாக இதுவரை பாராட்டுக்கள் கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், பிளாஸ்ட் திரைப்படத்திற்கு பின் ஆக்ஷன் கிங் மகளாக நடித்த இவரை இனி ஆக்ஷன் பிரின்சஸ் என்று கூட அழைக்கலாம். அந்த அளவிற்கு இப்படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். மேலும், விருமாண்டி அன்னலட்சுமியா இது என கேட்கும் அளவிற்கு ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார் நடிகை அபிராமி. உடல் எடையை குறைத்து கடினமான சண்டை காட்சிகளில் பட்டையை கிளப்பியுள்ள அபிராமிக்கு பாராட்டுக்கள்.

பிளாஸ்ட் திரை விமர்சனம் | Blast Movie Review

இவர்களை தவிர்த்து இப்படத்தில் கவனம் பெற்றவர் என்றால் அது, நடிகர் அர்ஜுன் சிதம்பரம் தான். பொன்னியின் செல்வன், நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் அர்ஜுன் சிதம்பரத்திற்கு கண்டிப்பாக பிளாஸ்ட் திரைப்படம் அவருடைய திரை வாழ்க்கையில் மைல்கல்லாக அமையும். மேலும், மற்ற அனைத்து நடிகர்கள், நடிகைகளும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தனர்.

சண்டை காட்சிகளை தாண்டி இப்படத்தில் Women Empowerment குறித்து இயக்குநர் பேசியுள்ளார். அது இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ப்ரீத்தி முகுந்தன் வேலை பார்க்கும் அலுவலகத்தில் சந்திக்கும் துன்புறுத்தலை எப்படி எதிர்கொண்டார் என்பதை காட்டிய விதம், பெண்களிடம் தவறாக நடந்துகொள்ள நினைப்பவர்களுக்கு கொடுத்த சரியான அடியாக இருக்கும். அதே போல், நமக்கு தெரிந்தவர்களுக்கு அநீதி நடந்தால் மட்டும் நாம் தட்டிக்கேட்க கூடாது, நமக்கு யார் என்றே தெரியாத ஒருவருக்கு அநீதி நடந்தாலும் அதை நாம் தட்டிக்கேட்க வேண்டும் என சொன்ன விஷயமும் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிளாஸ்ட் திரை விமர்சனம் | Blast Movie Review

ரவி பஸ்ரூர் பின்னணி இசை இப்படத்திற்கு பலம். ஆனால், இன்னும் சில இடங்களில் நன்றாக பின்னணி இசை இருந்திருக்கலாம் என்று தோன்றியது. மேலும், ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் படத்தின் தரத்தை வேற லெவலுக்கு எடுத்து சென்றுள்ளது. இதை தவிர்த்து டெக்னீகள் ஒர்க்ஸ் அனைத்தும் படத்திற்கு நன்றாகவே உதவியுள்ளது.

பிளஸ் பாயிண்ட்

அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன், அபிராமி, அர்ஜுன் சிதம்பரம்

சண்டை காட்சிகள், அதை வடிவமைத்த ஸ்டண்ட் மாஸ்டர் பீனிக்ஸ் பிரபு

கேமரா ஒர்க்

Women Empowerment பற்றி பேசியது

மைனஸ் பாயிண்ட்

ஆக்ஷன் பிரியர்களை தவிர்த்து அனைவருக்கும் இப்படம் கனெக்ட் ஆகுமா என்பது கேள்விக்குறி, இதை தவிர படத்தில் ஒன்றும் பெரிய தவறில்லை.

மொத்தத்தில் பேமிலி ஆக்ஷன் ட்ராமாவாக உருவாகியுள்ள இந்த பிளாஸ்ட் திரைப்படம், ஆக்ஷனில் 'பிளாஸ்டு பிளாஸ்டு' தான்... கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்கலாம். 

பிளாஸ்ட் திரை விமர்சனம் | Blast Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US