பாக்ஸ் ஆபிஸ்: அர்ஜுன் நடிப்பில் வெளியான பிளாஸ்ட் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
பிளாஸ்ட்
ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் உருவாகி அண்மையில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் பிளாஸ்ட்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கினார். இவர் இயக்குநரும் மற்றும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனுடன் பணிபுரிந்தவர் ஆவார். தனது முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளார்.

அர்ஜுனுடன் இணைந்து அவருக்கு இணையான சண்டை காட்சிகளில் ப்ரீத்தி முகுந்தன் மற்றும் அபிராமி அசத்தியிருந்தனர். கே.ஜி.எப், சலார் போன்ற படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வசூல்
பேமிலி ஆக்ஷன் டிராமா கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் பிளாஸ்ட் திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 66.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளித்த 2026–27 பட்ஜெட் - புதிய நலத்திட்டங்கள் என்னென்ன? IBC Tamilnadu
ஒரு பவுன் தங்கம் வழங்கும் அண்ணன் சீர் திட்டம் - பட்ஜெட்டில் அமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு! IBC Tamilnadu