80களில் 15 மடங்கு லாபம் ஈட்டிய சூப்பர் ஹிட் படம்.. ரஜினி, கமல் படம் இல்லை, எந்த படம் தெரியுமா?
80 காலகட்டம்
தமிழ் சினிமாவில் 80களின் காலகட்டத்தில் பிரபல நடிகர்கள் என்றால் நமக்கு முதலில் நியாபகம் வருவது ரஜினி மற்றும் கமல் தான்.
அவர்கள் படங்கள் தான் பாக்ஸ் ஆபிஸில் நிறைய மாற்றங்களை நடத்தியுள்ளது. ஆனால் தற்போது ஒரு பிரபல நடிகரின் படம் 80களில் 15 மடங்கு லாபத்தை கொடுத்துள்ளது.
என்ன படம்
1989ல் ரூ. 35 லட்சம் பட்ஜெட்டில் உருவாகி 15 மடங்கு அதாவது படம் ரூ. 5 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளது.
அது என்ன படம் என்றால் கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் படம் தான்.
தமிழில் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக சக்கை போடு போட்ட இப்படம் தெலுங்கில் கரகாட்ட கோபையா என்ற பெயரில் டப் செய்யப்பட்டு தெலுங்கில் வெளியானது.
இந்த படத்தின் கதை தில்லானா மோகனாம்பாள் படத்தின் இன்ஸ்பிரேஷன் என்று கங்கை அமரனே கூறியிருக்கிறார்.