ப்ளூ பீட்டில் திரை விமர்சனம்

Report

ஹாலிவுட் படங்களின் அஜித்-விஜய் தான் இந்த மார்வல்-டிசி. இதில் எப்போதும் மார்வல் கைகளே உயர்ந்து நிற்கும். ஆனாலும், பேட்மேன், ஜோக்கர், அகுவாமேன் போன்ற படங்கள் மூலம் டிசி டப் கொடுத்தாலும் கடந்த சில வருடம் மிகப்பெரும் சறுக்கலில் உள்ளது, அந்த சறுக்கலில் இருந்து டிசி-யின் புதிய சூப்பர் ஹீரோ ப்ளூ பீட்டில் காப்பாற்றினாரா பார்ப்போம்.

கதைக்களம்

படித்துவிட்டு ஒரு நல்ல வேலைக்கு சென்று தன் கஷ்டப்பட்ற குடும்பத்தை காப்பாற்ற வேண்டுக் என நாயகன் இருக்க, ஒரு நாள் மிகப்பெரும் கார்ப்ரைட் கம்பெனி பங்குதாரர் ஜெனி-யின் நட்பு ஹீரோவுக்கு கிடைக்கிறது. 

ப்ளூ பீட்டில் திரை விமர்சனம் | Blue Beetle Movie Review

அந்த ஜெனி தன் கம்பெனியின் மற்றொரு பங்குதாரர் ஸ்கேரம் என்ற ஒரு பொருளை அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறார் என தெரிந்து, அதை ஹீரோ கையில் கொடுத்து பத்திரப்படுத்த சொல்கிறார்.

ஆனால், அந்த ஸ்கேரம் நம் நாயகனை தேர்ந்தெடுக்க பிறகு என்ன நல்லதுக்கும், கெட்டதுக்கும் நடக்கும் யுத்தமே இந்த ப்ளூ பீட்டில்.

படத்தை பற்றிய அலசல்

டிசி படம் என்றாலே இருண்ட வாழ்க்கையே இருக்கும் என்ற பேச்சு சில வருடமாக மாறி வருகிறது. அதிலும் இந்த ப்ளூ பீட்டில் எல்லாம் செம்ம ஜாலியாக ஏதோ மார்வெல் படம் போல் உள்ளது.  

ப்ளூ பீட்டில் திரை விமர்சனம் | Blue Beetle Movie Review

படத்தில் பேமிலி செண்டிமெண்ட் நிரம்பி வழிகிறது, அதே இடத்தில் செண்டிமெண்ட் தூக்கலாக செல்லும் போது நாயகனின் அங்கிள் ரூடி ரு கவுண்டர் கொடுத்து கலகலப்பாக்குகிறார்.

ஸ்கேரம், ஓ-மேக் என்ற இரண்டு ஷுட்களை காட்டியுள்ளனர். இந்த ஸ்கேரம் ஸ்பைடர் மேன் அயன் மேனாக மாறினால் எப்படியிருக்கும், அப்படி ஒரு டெக்னாலஜி.

சிஜி காட்சிகள் அற்புதம், அதுவும் ஸ்கேரம் நாயகன் உடலில் சென்று சில நேரம் அவர் அதை புரிந்துக்கொள்ள படும் கஷ்டம் எல்லாம் காமெடியாக காட்டியது ரசிக்கும்படி உள்ளது.

ப்ளூ பீட்டில் திரை விமர்சனம் | Blue Beetle Movie Review

பின்னணி இசையும் பிரமாதம், ஆனால், இத்தனை இருந்தும் படம் பல இடங்களில் சிறுப்பிள்ளை தனமாகவும் இருப்பதை உணர முடிகிறது.

அதிலும் கிளைமேக்ஸில் ஹீரோவை காப்பாற்ற குடும்பமே செல்லும் காட்சி எல்லாம் பார்க்க நன்றாக இருந்தாலும் லாஜிக் எத்தனை கிலோ தான் கேட்க தோன்றுகின்றது.

க்ளாப்ஸ்

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஜாலியான சூப்பர் ஹீரோ.

படத்தின் சிஜி காட்சிகள். பின்னணி இசை.

பல்ப்ஸ்

எக்கசக்க லாஜிக் மீறல்கள்.. சூப்பர் ஹீரோ கதை என்றாலும் கொஞ்சம் ஓவர் தான். 

மொத்தத்தில் கண்டிப்பாக டிசி-க்கு ஒரு ஜாலியான பேமிலி ப்ரண்ட்லியான சூப்பர் ஹீரோ கிடைத்துள்ளார், நீங்களும் குடும்பத்துடன் ஜாலியாக ஒரு முறை இந்த புளு பீட்டிலை காணலான். 

ப்ளூ பீட்டில் திரை விமர்சனம் | Blue Beetle Movie Review

தமிழ் நடிகர்களுக்கு நோ.. ஷாருக்கானுக்காக மட்டும் அந்த விஷயத்திற்கு ஓகே சொன்ன நயன்தாரா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US