உலக மகா உருட்டு.. வாரிசு படத்தின் 300 கோடி வசூலை கிண்டல் செய்த ப்ளூ சட்டை மாறன்
ப்ளூ சட்டை மாறன்
தமிழ் சினிமாவில் பிரபலமான விமர்சகர்களில் ஒருவர் ப்ளூ சட்டை மாறன். இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்வார்.
இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாரிசு படத்தின் ரூ. 300 கோடி வசூலை கிண்டலடிக்கும் வகையில் '300 கோடி. உலக மகா உருட்டு' என பதிவு செய்துள்ளார்.
வாரிசு வசூல்
விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரித்த படம் வாரிசு. இப்படம் கடந்த பொங்கலுக்கு வெளிவந்த முதல் சில நாட்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதை தொடர்ந்து வந்த குடும்ப ரசிகர்கள் இப்படத்திற்கு பலமாக அமைந்தனர். இதுவே இப்படத்தின் வசூல் அதிகரிக்க காரணமாக அமைந்தது.
Aatanayagan ON DUTY ?#MegaBlockbusterVarisu officially enters the 300Crs worldwide gross collection club now ?#Thalapathy @actorvijay sir @SVC_official @directorvamshi @iamRashmika @MusicThaman @7screenstudio @TSeries #Varisu#VarisuCrosses300CrsWWGross pic.twitter.com/A4K1yLeD4E
— Sri Venkateswara Creations (@SVC_official) February 6, 2023
வாரிசு திரைப்படம் ரூ. 300 கோடியை உலகளவில் கடந்துவிட்டது என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இப்படி பதிவு செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உடல்நிலை சரியில்லாத சமந்தாவை வீட்டில் தங்கி பார்த்துக்கொண்டு நபர்.. விவாகரத்துக்கு பின் சமந்தா எடுத்த முடிவு