ப்ளூ சட்டை மாறன் படத்திற்கு வெளிநாட்டில் தடை! ஷாக் ஆகாம காரணத்தை பாருங்க
திரைப்படங்களை கடுமையாக விமர்சித்து அதனால் வரும் பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் ப்ளூ சட்டை மாறன். அவரை திட்டாத சினிமா தயாரிப்பாளரே இருக்க வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு சினிமா துறையினர் அவர் மீது கடுப்பில் இருக்கிறார்கள்.
தற்போது ப்ளூ சட்டை மாறன் சொந்தமாக இயக்கி ஆண்டி இண்டியன் என்ற படத்தை பல போராட்டங்களுக்கு பிறகு வெளியிட்டு இருக்கிறார். அவரே எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் ஆண்டி இண்டியன் படம் வெளியாகி இருக்கிறது.
ஆனால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி இல்லை என சொல்லி சிங்கப்பூர் தடை விதித்து இருகிறது. "படம் பார்த்த Examine கமிட்டி மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்கள் படத்தில் இருப்பதால் சென்சார் வழங்க மறுத்து விட்டது" என ப்ளூ சட்டை மாறன் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
ஆனால் மறுதணிக்கைக்கு விண்ணப்பித்து இருப்பதாகவும் அது ஓரிரு தினங்களில் நடக்கும் என்றும் அவர் கூறி உள்ளார்.
— Blue Sattai Maran (@tamiltalkies) December 9, 2021