ப்ளூ ஸ்டார் படத்தின் விமர்சனம்..
ப்ளூ ஸ்டார்
பா. ரஞ்சித் தயாரிப்பில் எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார். இப்படத்தில் அசோக் செல்வன், ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பில் இருந்த இப்படத்தின் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் எக்ஸ் தளத்தில் தங்களுடைய விமர்சனங்களை கூறியுள்ளனர். அதன்படி, இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எந்த அளவிற்கு பூர்த்தி செய்தது என்று பார்க்கலாம்.
விமர்சனம்
படத்தின் ரைட்டிங் சூப்பர். சொல்ல வந்த விஷயத்தை தெள்ளத்தெளிவாக கூறியுள்ளனர். திரைக்கதை எந்த வகையிலும் சொல்ல வந்த விஷயத்தில் இருந்து வெளியே செல்லவில்லை.
அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு இருவருடைய நடிப்பும் பர்ஃபார்மென்ஸ் குட். முதல் பாதி சூப்பர். இரண்டாம் பாதியில் சில தொய்வு. அதில் சில காட்சிகளை ட்ரிம் செய்து இருக்கலாம்.
வழக்கமான ஹீரோயின் போல் இல்லாமல் மாறுபட்ட வேடத்தில் அசத்தியுள்ளார் கீர்த்தி பாண்டியன். கிரிக்கெட் இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. அதில் அரசியல் பார்வையை பற்றியும் பேசியுள்ளனர்.
கோவிந்த் வசந்தாவின் ரயிலின் ஒலிகள் பாடல் சூப்பர். அதே போல் பின்னணி இசை நன்றாக இருக்கிறது. நீலம் தயாரிப்பில் இருந்து மற்றொரு சிறப்பான படைப்பு என விமர்சனங்கள் தெரிவித்துள்ளனர்.
#BlueStar - Impressive & Engaging 1st Half. Perfect Casting. Ashok Selvan & Shanthanu's Performance Gud. Prithvi Sema Fun Role. Railin Oligal Song Sema. Lenghty & Predictable 2nd Half. 2nd Half Needs Atleast 15 Mins Needs Trim. Overall A Decent Watch.
— Trendswood (@Trendswoodcom) January 25, 2024
#BlueStar - The story doesn't have any distractions. Writing is straight to the point. Sticks to the core spirit of Cricket. Although, there are caste elements, it doesn't go overboard. @AshokSelvan & @imKBRshanthnu give their best. 2nd half needs little trimming. Overall, Gud. pic.twitter.com/6SWEjL4T0O
— Richard Mahesh (@mahesh_richard) January 25, 2024
You May Like This Video