நடிகர் நானியின் படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை.. யாரு தெரியுமா?
நடிகர் நானி
தெலுங்கு சினிமாவில் Natural Star என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் நானி.
இவரது நடிப்பில் கடைசியாக கடந்த வருடம் Saripodhaa Sanivaaram என்ற படம் வெளியாகி இருந்தது, படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு கிடைத்தது.
இப்போது நானி Saripodhaa Sanivaaram படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஓடெலா இயக்கத்திலேயே தி பாரடைஸ் என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.
நானி இதற்கு முன் ஏற்றிராத மிக வலிமையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.
பிரபல நடிகை
சமீபத்தில் இந்த படத்தின் ரா ஸ்டேட்மென்ட் எனும் வீடியோ தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய 5 மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. மற்ற மொழி பதிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
காகங்கள் பற்றிய கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் பிரபல பாலிவுட் நடிகை சோனாலி குல்கர்னி. இதில் சோனாலி, நானியின் அம்மாவாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.