தீபிகா முதல் மிருணால் தாக்கூர் வரை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற பாலிவுட் நடிகைகள்.. லிஸ்ட் இதோ
சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பலருக்கு ஆசை உண்டு. அந்த ஆசைக்கு படிக்கட்டாக இருப்பது சின்னத்திரை தான். சின்னத்திரை மூலம் தன் நடிப்பு திறமையை வெளிக்காட்டி பிறகு வெளித்திரையில் நுழைந்தவர்கள் பலர் இருக்கின்றனர்.
ஆனால், அதில் பலருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. சிலர் தன் உழைப்பாலும், திறமையாலும் அந்த வாய்ப்பை தக்க வைத்து கொள்கிறார்கள். அவ்வாறு சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற பாலிவுட் நடிகைகள் சிலர் பற்றி காணலாம்.
மிருணால் தாக்கூர் :
இவர் குங்கும் பாக்யா என்ற சீரியலில் நடித்திருப்பார். இந்த சீரியல் தமிழில் இனிய இரு மலர்கள் என்ற தலைப்பில் டப் செய்யப்பட்டது. இதில் பிரக்யாவின் தங்கையாக மிருணால் நடித்திருந்தார். பிறகு தன் திறமையால் லவ் சோனியா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதன்பின், இவர் சீதா ராமம், ஹை நன்னா போன்ற தெலுங்கு படங்களில் நடித்து, அதன் மூலம் தென்னிந்திய சினிமாவிலும் பிரபலமடைந்தார்.
தீபிகா படுகோன் :
இந்தியாவில் தற்போது அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன். இவர் ஆரம்பத்தில் மாடலாக இருந்து பிறகு, கஹானி கர் கர் கி என்ற சீரியல் மூலம் பிரபலமடைந்தார். ஓம் சாந்தி ஓம், பத்மாவத், பதான், ஜவான், கல்கி 2898 என பல வெற்றி படங்களை தனது திரை வாழ்க்கையில் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வித்யா பாலன் :
ஹம் பாஞ்ச் என்ற சீரியல் மூலம் ரசிகர்களை சம்பாதித்து அதன்முலம் வெள்ளிதிரையில் நுழைந்தவர் வித்யா பாலன். பிறகு இவர் கஹானி, தி டர்ட்டி பிக்சர், மிஷன் மங்கல், சகுந்தலா தேவி என பல வெற்றி படங்களில் நடித்து தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
