வியக்கவைக்கும் பாலிவுட் நட்சத்திரங்களின் நிகர மதிப்பு.. இத்தனை கோடியா.. லிஸ்ட் இதோ
தனது கடின உழைப்பால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து தற்போது, பாலிவுட் சினிமாவில் அதிக சொத்து மதிப்பு வைத்திருக்கும் நட்சத்திரங்கள் குறித்து காணலாம்.
ஷாருக்கான் :
கொல்கத்தா அணியின் உரிமையாளரும், பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகருமான ஷாருகானின் நிகர மதிப்பு தற்போது, ரூ. 7,300 கோடியாக உயர்ந்து பாலிவுட் சினிமாவில் அதிக சொத்து வைத்துள்ள நடிகராக கருதப்படுகிறார்.
ஜூஹி சாவ்லா :
இந்தி சினிமா முன்னணி நடிகையான இவர் தனது சிறந்த நடிப்பு மூலம் பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார். இவருடைய நிகர மதிப்பு ரூ.4,600 கோடி என கூறப்படுகிறது.
ஹ்ரித்திக் ரோஷன் :
குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பல ரசிகர்களால் விரும்பப்படும் நடிகராக வலம் வருபவர் ஹ்ரித்திக் ரோஷன். இவருடைய சொத்து மதிப்பு ரூ.2,000 கோடி என கூறப்படுகிறது.
அமிதாப் பச்சன் :
பல தலமுறையாக பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகனாக உச்சத்தில் இருப்பவர் அமிதாப் பச்சன். இன்றும் தனது நடிப்பால் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் இவருடைய நிகர மதிப்பு ரூ. 1,600 கோடி வரை உள்ளது.
கரண் ஜோஹர் :
பாலிவுட் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர்,நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல முகங்களை கொண்ட கரண் ஜோஹரின் சொத்து மதிப்பு ரூ. 1,400 கோடி என கூறப்படுகிறது. இது இணையத்தில் வெளியாகியுள்ள தகவல் மட்டுமே, இதுகுறித்து எந்த அதிகாரப்பூரவமான தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
