பாலிவுட்டில் கால்பதிக்கும் நடிகை சமந்தா: படத்தை தயாரிக்கும் பிரபல நடிகை!
நீதானே என் பொன்வசந்தம் மூலம் பிரபலமடைந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் மட்டுமல்லாமல் தெந்திந்திய சினிமாவிலும் தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக நடிகை சமந்தா இருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானவர். இவர் நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் கடந்த 2019-ல் வெளியாகியிருந்தது. மேலும் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய்சேதுபதி நயன்தாராவுடன் இணைத்து நடித்துள்ளார்.
இந்த படம் இந்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது. கடந்த ஜூன் மாதம் வெளியான The Family Man 2 தொடரில் நடிகை சமந்தா நடித்திருந்தார், இதன் மூலம் பாலிவுட்டிலும் பிரபலாமானார் . அதனை தொடர்ந்து சமந்தாவிற்கு ஹிந்தி படவாய்ப்புகளும் வர தொடங்கியுள்ளது.
அதன்படி அவர் ஒரு ஹிந்தி படத்தில் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. வுமன் சென்ட்ரிக் படமாக இருக்கபோகும் இந்த படத்தை ஆடுகளம், காஞ்சனா 2 போன்ற படங்களில் நடித்து தமிழில் பிரபலமான நடிகை டாப்ஸி பன்னுவின் தயாரிப்பு நிறுவனமான அவுட்சைடர் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.