பிரபல நடிகையின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. ஷாக்கிங் தகவல்! ஆனால்..
சொர்ணமால்யா
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த அலைபாயுதே படத்தில் ஷாலினியின் அக்காவாக நடித்து பிரபலமானவர் நடிகை சொர்ணமால்யா.
அதனை தொடர்ந்து இவர், எங்கள் அண்ணா, யுகா, மொழி, பெரியார், அழகு நிலையம் போன்ற பல படங்களில் நடித்து தனக்கென்று தனி இடத்தை சினிமாவில் பிடித்தார். இவர் கடைசியாக புலிவால் என்ற படத்தில் நடித்தார்.
அதன்பின் இவர் சினிமாவை விட்டு விலகிவிட்டார். சினிமாவை தாண்டி நடிகை சொர்ணமால்யா பரதநாட்டியத்தில் கைதேர்ந்தவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெடிகுண்டு மிரட்டல்
இந்நிலையில், நடிகை சொர்ணமால்யா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகி, அனைவரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை சொர்ணமால்யா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்பட்ட நிலையில், சோதனை நடத்தியுள்ளனர். இதில் இது வெறும் புரளி என தெரியவந்துள்ளது.