திடீரென நடிகை த்ரிஷா வீட்டில் குவிந்த போலீஸ்... பரபரப்பான சூழல்
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக அழகு மற்றும் நடிப்பின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் நடிகை த்ரிஷா.
சில வருடங்களுக்கு முன் சரியான பட அமையாமல் ஹிட் கொடுக்காமல் இருந்தவர் இப்போது மீண்டும் ஹிட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.
தமிழில் அஜித், விஜய், கமல் என முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடிக்கிறார். தெலுங்கு சினிமாவில் கூட இப்போது அதிக படங்கள் கமிட்டாகி நடிக்கிறார்.
கடைசியாக த்ரிஷா நடிப்பில் கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
போலீஸ்
தேனாம் பேட்டையில் உள்ள நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
அவரது வீட்டை தாண்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு, பாஜக தலைமை அலுவலகம், நடிகர் எஸ்வி சேகர் வீடு மற்றும் கவர்னர் மாளிகைக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து அனைவரது வீட்டிலும் மோப்பநாய் உதவியுடன் நடந்த சோதனையில் வெடி குண்டு மிரட்டல் போலி என தெரிய வந்துள்ளது.