நடிகர் விஜய் வீட்டிற்கு வந்த ஆபத்து- செய்தி கேட்டு அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகர் விஜய் படங்கள் நடிப்பது, ரசிகர்களை சந்திப்பது எப்போதும் பிஸியாகவே இருப்பார்.
அண்மையில் உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியிருந்தார்.
அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் தளபதியை பார்த்த சந்தோஷத்தில் கொண்டாடினார்கள். தற்போது என்னவென்றால் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து விஜய் வீட்டிற்கு விரைந்த நீலாங்கரை போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விஜய் வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பின்பு அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.
முதலில் வெடிகுண்டு மிரட்டல் என்ற செய்தியை கேட்ட ரசிகர்கள் ஷாக் ஆக புரளி என்றதும் கவலையை விட்டனர்.